பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகள் முன்னெடுப்பு!

Date:

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாகவுள்ள பௌத்த விகாரைகளில் இன்று விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மிஹிந்தலை, ஸ்ரீமகா போதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன உள்ளிட்ட விகாரைகளில் விசேட மத அனுஷ்டானங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.

இதற்காக நாடளாவிய ரீதியாகவும் இருந்து பௌத்தர்கள் குறித்த விகாரைகளுக்கு சென்றுள்ள நிலையில், இதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியாகவுள்ள சுமார் 11 ஆயிரம் விகாரைகளில் இன்று விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு, நாடளாவிய ரீதியாக பல்வேறு இடங்களில் தானசாலைகளும் அமைக்கப்பட்டு, மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

47,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் 700 இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொசன் பொளர்ணமி தினம் நடைபெறும் மிஹிந்தலை, ஸ்ரீ மகாபோதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன ஆகிய விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...