பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு சிறைக்கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிட அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது, கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்பு பொதிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி பார்வையாளர்கள் வர வேண்டும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.