இலங்கையில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றியடையச் செய்வதற்கு தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தாவூதி போரா சமூகத்தின் ஆன்மீக மாநாடான ‘ஆஷாரா முபாரகா’ ஜூலை ஆறாம் திகதி முதல் 10 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு கலாசார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக செறிவூட்டலை வளர்ப்பது மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.