மஹிந்தானந்த- குணதிலக்க எம்.பிக்களுக்கிடையில் மோதல்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குணதிலக ராஜபக்ஷவுக்கு மூன்றரை மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது காலில் நேற்று செவ்வாய்க்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் குணதிலக்க ராஜபக்ச காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோதலில் காயமடைந்த குணதிலக்க ராஜபக்ச நேற்று முன்தினம் இரவு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துள்ளதாக, குணதிலக்க ராஜபக்ச எம்.பியின் மகன் நிலுபுல் ராஜபக்ச கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் தனது தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகையில், தான் அவரை தாக்கவில்லை என மறுத்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...