முறிந்து விழும் மரங்கள் தொடர்பில் நிலத்தடி தன்மையை ஆராய தீர்மானம்

Date:

கொழும்பில் முறிந்து விழும் அபாய நிலையில் இல்லாத மரங்களின் வேர்கள் மற்றும் நிலத்தடி தன்மை என்பன தொடர்பில், புதிய ஆய்வொன்றை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் கொழும்பில் அண்மைக்காலமாக முறிந்து வீழ்ந்த பெரும்பாலான மரங்கள், முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் மாத்திரம் 500 மரங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 200 பழமையான மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டது.

இதுவரையான காலப்பகுதியில் அவற்றில் 160 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏனைய ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குழாய் நீர் பொருத்துதல் மற்றும் ஏனைய பணிகளின் போது மரங்களின் வேர்கள் பாதிக்கப்படும் என்பதால் அவை குறித்து அவதானம் செலுத்தப்படுகின்றது.

எதிர்காலத்தில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் உதவியுடன் அதற்கான ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளும் தேவைப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...