ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பால் 32 ரயில் சேவைகள் இரத்து

Date:

ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (7) காலை மாத்திரம் 32 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற்பகலில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் என்ஜின் சாரதிகள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 ரயில் நிலையங்களில் இரண்டின் சாரதிகள் மாத்திரமே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மின்சார ரயில் இயங்காது எனவும் லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேனாநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 84 ரயில் சாரதிகளின் பதவி உயர்வு பிரச்சினையின் அடிப்படையில் அந்த சாரதிகளே இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...