ரஷித் கானின் ‘தவறு’, தென்னாப்பிரிக்காவின் ‘நல்வாய்ப்பு’ – ஆப்கானிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன?

Date:

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக, தென் ஆப்ரிக்கா அணி தகுதி பெற்றது.

டி20 உலகக் கோப்பை அரையிறுதி பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. ஆடுகளத்தை சரியாகக் கணிக்காமல் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது அவர்களின் இத்தனை ஆண்டு கடின உழைப்பை வீணாக்கியது.

இதுவரை ஐசிசி நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் அரையிறுதியைக் கூட தாண்டியதில்லை, ‘சோக்கர்ஸ்’ என்ற பெயரெடுத்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கடந்த 2014ம் ஆண்டு வென்றிருந்தது. அதன்பின் இதுவரை ஐசிசி சார்பில் எந்தஒரு கோப்பையையும் தென் ஆப்ரிக்கா அணி வென்றதில்லை. ஆனால், இந்த முறை லீக் போட்டி முதல் அரையிறுதிவரை ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியுள்ளது.

டரூபாவில் நேற்று(26ம்தேதி) நடந்த டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 56 ரன்களில் சுருண்டது. 57 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்ரிக்கா 67 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று(27ம்தேதி) இரவு நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- இந்தியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி தென் ஆப்ரிக்காவுடன் கோப்பைக்காக மல்லுக்கட்டும்.

டி20 உலகக் கோப்பை

மறக்கமுடியாத பயணம்

தென் ஆப்ரிக்க அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் 2024 டி20 உலகக் கோப்பை பயணம் மறக்கமுடியாததாக அமைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல 50 ஆண்டுகளில் பல அணிகள் செய்த சாதனையை வெறும் 20 ஆண்டுகளில் செய்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிவரை வந்துள்ளது.

2010ம் ஆண்டு ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியும், அந்த அணி பல்வேறு ஜாம்பவான் அணிகளுக்கு அவ்வப்போது அளித்த அதிர்ச்சித் தோல்விகளும் தாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதை சொல்லிவந்தன.

இந்த உலகக் கோப்பை பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிவரை பயணித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். வரும் காலத்தில் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்வோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ஆப்கானிஸ்தான் விடைபெற்றது.

டி20 உலகக் கோப்பை

விக்கெட் வீழ்ச்சி

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் தீர்மானித்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பது சற்று நேரத்திலேயே தெரிய வந்தது.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் அனல் தெறிக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் மைதானம் வருவதும், அடுத்த சில நிமிடங்களில் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் யான்சென், சந்தித்த முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த குல்புதீன் நயீப்(9), இப்ராஹிம் ஜாத்ரன்(2), முகமது நபி(0),கரோடே(2) என பவர்ப்ளே ஓவருக்குள் ரபாடா, நோர்க்கியா, யான்சென் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை சரிந்தது. பவர்ப்ளே முடிவில் 23ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சைக் கூட எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்த பதற்றம், ஆட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்ற குழப்பம் பேட்டர்கள் முகத்தில் தெரிந்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து 11.5 ஓவர்களில் 56 ரன்களில் ஆட்டத்தை முடித்தனர்.

நல்லவேளையாக இதைச் செய்யவில்லை – தென்னாப்பிரிக்க கேப்டன் கூறியது என்ன?

“இது ஒரு பெரிய கூட்டு முயற்சி” என்றார் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம். “நாங்கள் டாஸில் தோற்றது எங்களது அதிர்ஷ்டம். இல்லையென்றால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம்.” என்று அவர் கூறினார்.

“இதற்கு முன்பு நாங்கள் அங்கு (இறுதிப் போட்டி) சென்றதில்லை, ஆனால் நிறைய நம்பிக்கை இருக்கிறது.” என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் NewsNow  ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...