ராபிததுந் நளீமிய்யீனுன் 10ஆவது வருடாந்த ஒன்றுகூடல் ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பான ராபித்துந் நளிமிய்யீனுன் 10 வது வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் 30 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நளீமிய்யா கலாபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.
அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம் லாபிர் மதனி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பிதம அதிதியாக ஜாமிஆ நளீமிய்யாவின் முன்னாள் பிரதிப்பணிப்பாளர் வங்காளதேசத்தைச் சேர்ந்த மௌலானா ஷஹீதுல்லாஹ் கவ்ஸர் கலந்து கொள்ள உள்ளார்.
அத்தோடு நிகழ்வின் கௌரவ அதிதியாக ஜாமிஆ நளீமிய்யா பரிபாலன சபைத்தலைவர் யாகூத் நளீம், விஷேட அதிதியாக ஜாமிஆ நளீ மிய்யாவின் முதல்வர் உஸ்தாத அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஆகியோர் பங்குபற்ற உள்ளனர்.
இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்வு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
முதல் அமர்வான அங்குரார்ப்பன நிகழ்வின் போது மௌலானா ஷஹீதுல்லாஹ் கவ்ஸருக்கான கௌரவிப்பு நிகழ்வும் ராபிதாவின் செய்தி மடல் வெளியீடும் இடம்பெறும்.
இரண்டாவது அமர்வில் பழைய மாணவர் சந்திப்பும் வருடாந்த அறிக்கைகள் உள்ளிட்ட அடுத்த வருடத்திற்கான செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த வரு டாந்த ஒன்று கூடலில் உள்நாட் டிலும் வெளிநாடுகளிலும் பணி யாற்றும் நளீமியாவின் பழைய மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.