ரொனால்டோவின் இமாலய சாதனை முறியடிப்பு: வரலாறு படைத்த 19 வயது இளம் வீரர்

Date:

Oruvan

யூரோ கால்பந்து தொடரில் மிகவும் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை துருக்கியே வீரர் அர்டா குலர் படைத்துள்ளதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

நடப்பு யூரோ 2024 கால்பந்து தொடரின் ஜோர்ஜியா அணிக்கு எதிரான போட்டியின் போது துருக்கியே அர்டா குலர் (Arda Guler) கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், புதிய சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

இந்தப் போட்டியில் துருக்கியே அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்ஜியா அணியை வீழ்த்தியது.

துருக்கியே சார்பில் மெர்ட் முல்டுர் (25), அர்டா குலர் (65) மற்றும் முகமது கெரெம் (90+7) கோல் அடித்தனர்.

இதில் அர்டா குலர் (Arda Guler) அடித்த கோல் மூலம், இளம் வயதில் யூரோ கால்பந்து தொடரில் அடித்த வீரர் எனும் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 19 வயது 128 நாட்களில் கோல் அடித்த நிலையில், அர்டா குலர் 19 வயது 114 நாட்களில் கோல் அடித்துள்ளார்.

அர்டா குலர் 2019ஆம் ஆண்டில் Turkish Cupin 2023 தொடரை Fenerbahce அணி வெல்ல உதவியதுடன், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய குலர் 10 போட்டிகளில் 6 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கிய மெஸ்ஸி என்று அடிக்கடி குறிப்பிடப்படும்குலர் , சமீபத்திய மாதங்களில் கால்பந்து போட்டிகளில் அசுற வளர்ச்சியை கண்டுள்ளார்.

தலைநகர் அங்காராவைச் சேர்ந்த அவர் ஒன்பது வயது முதல் கால்பந்து விளையாடி வருகின்றார்.

16 வயது 174 நாட்கள் இருக்கும் போதே அர்டா குலர் தேசிய அணிக்கு அழைத்துவரப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...