15 அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கம் : வர்த்தமானி வெளியீடு!

Date:

நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களும் முடக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

15   அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதிகள், பிற நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார ஆதாரங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) , தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்பவை முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் ( JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS) , கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT) , தமிழ் இளைஞர் அமைப்பு (TYO) , டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM) , Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...