20 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்ட உன்னதமான காட்சிகள்!

Date:

புனித ஹஜ் கடமைக்காக  இரண்டு மில்லியனுக்கும் அதிமான ஹஜ்ஜாஜிகள் இன்று அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதே ஹஜ் கடமையின் முக்கியமான அம்சமாகும்.

புனித ஹஜ் கடமைக்காக சென்றுள்ள ஹஜ்ஜாஜிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடும்  விசேட நாள் இன்றாகும்.

ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்ட உன்னதமான காட்சிகளே இது…

உலகின் நாலா பகுதிகளில் இருந்தும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஹஜ்ஜாஜிகள் இம்முறை புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் இறுதிக் கடமையாகவே ஹஜ் கடமை திகழ்கின்றது.

பொருளாதார ரீதியாக வசதி படைத்த ஒருவர் தேக ஆரோக்கியத்துடன் இருந்தால், அவர் கட்டாயமாக புனித கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.

அரஃபா  மைதானத்தில் இன்று கூடிய ஹஜ்ஜாஜிகள் விசேட தூஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

ஹஜ் கடமைக்காக மாக்கா சென்று நோய்வாய்ப்பட்ட ஹாஜிகள் சவுதி அரசாங்கத்தினால் ஹெலிகொப்டர்கள் மூலம் அரஃபா மைதானத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இன்று அரஃபா மைதானத்தில் இருந்து முஸ்தலிபாவிற்குச் செல்லும் ஹாஜிகள் அங்கு தரிப்பர். அதன் பின்னர் மினாவிற்கு சென்று ஜமராத்களுக்கு கல் எறிவர்.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாகவே இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதிக்கடமையாக ‘ஹஜ்’  கடமையாக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...