2024 ஆம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவுற்றன.
ஹஜ் யாத்திரை, துல்ஹஜ் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 9, 10,11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்டது.
இன்று இந்த ஹஜ் கிரியைகள் புனித மக்கா மசூதியைச் சுற்றி தவாஃபுல் இவாலா மற்றும் தவாஃபுல் வதாலாவுடன் முடிவடையும் அதன் பிறகு ஹஜ் யாத்ரீகர்கள் அந்தந்த நாடுகளுக்குச் செல்வார்கள்.
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சுமார் இரண்டரை மில்லியன் மக்களை ஒரே இடத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் ஒன்று சேர்ப்பதும், அவர்களுடைய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதும், குறிப்பாக நிம்மதியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும், மருத்துவம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் அதிநவீன முறையில் செய்து கொடுப்பதும் இலகுவான காரியமல்ல.
இதற்கென பாரிய திட்டமிடலும் விசாலமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கபட்டிருந்தன. அந்த வகையில் இவ்வருட ஹஜ் கிரியைகளுக்கான அனைத்து திட்டமிடல்களும் ஏற்பாடுகளும் நிர்வாக செயற்பாடுகளும் கடந்த வருடம் ஹஜ் கிரியைகள் நிறைவுற்றதும் ஆரம்பிக்கப்பட்டுவிடும். இது தான் சவுதி அரேபியா தொன்று தொட்டு முன்னெடுத்துவரும் வழக்கமாகும்.
அதற்கமைய இவ்வருடம் கலந்து கொண்ட ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.
ஒவ்வொரு நாட்டினதும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இம்முறை கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்து ஹஜ்ஜில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை…
இதற்கிடையில், 5 நாட்கள் நீடித்த ஹஜ் யாத்திரையை 1.8 மில்லியன் மக்கள் கடுமையான சூரிய ஒளிக்கு மத்தியில் நிறைவேற்றினர்.
இதன் காரணமாக சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.