4 வயது சிறுமியை தாக்கிய நபர் மீது கைதிகள் தாக்குதல்

Date:

4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர்  சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...