இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் அவர்கள் (68) மாரடைப்பு காரணமாக மக்காவில் உயிரிழந்துள்ளதாக இலங்கை முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹாதீ ட்ரவல்ஸ் நிறுவனத்தின் ஊடாக ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இவர் முஸ்லிம் மத்திய கல்லூரி வீதி, அக்கரைப்பற்று-6ஐ சேர்ந்தவராவர்.
அவரது ஜனாஸா புனித மக்காவின் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் உள்ளது.
அரஃபா மினாவில் நிறைவேற்றப்பட வேண்டிய ஹஜ் கடமைகளை பூர்த்தி செய்த பின்னர், இறுதியாக ஹஜ்ஜுடைய தவாஃபுக்காக வேண்டி மக்கா திரும்பிய நிலையிலே இவருடைய திடீர் மரணம் சம்பவித்துள்ளது.
ஹஜ் கமிட்டி, முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம், ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் ஹாதீ டிராவல்ஸ் நிறுவனம் புனித மக்கா நகரில் ஜனாஸாவை அடக்கம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.