அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06) பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வொன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புகாரிய்யா மத்ரஸா (நாகவில்லு), மிஸ்பாஹூல் உலூம் (ரத்மல்யாய), முஹாஜிரீன் மத்ரஸா( தில்லேடி), காஸிமீய்யாஹ் மத்ரஸா, இஹ்யாவுல் உலூம் மத்ரஸா, அப்துல் மஜித் எகடமி, அஷ்ரபிய்யாஹ் மத்ரஸா, தாருல் குர்ஆனுல் கரீம் மத்ரஸா மாணவர்கள், உஸ்தாத்மார்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் இதுவரை பிறைப்பார்த்து வந்த குழுக்களுடன் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகர கிளையின் உறுப்பினர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு நிர்வாகத்தின் உதவி செயலாளர் அஷ்ஷேக் எம். ஆர். அப்துர் ரஹ்மான் ஹிலாலி ஹஸரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.