ACJU புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறை பார்த்தல் சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06) பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வொன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் புகாரிய்யா மத்ரஸா (நாகவில்லு), மிஸ்பாஹூல் உலூம் (ரத்மல்யாய), முஹாஜிரீன் மத்ரஸா( தில்லேடி), காஸிமீய்யாஹ் மத்ரஸா, இஹ்யாவுல் உலூம் மத்ரஸா, அப்துல் மஜித் எகடமி, அஷ்ரபிய்யாஹ் மத்ரஸா, தாருல் குர்ஆனுல் கரீம் மத்ரஸா மாணவர்கள், உஸ்தாத்மார்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் இதுவரை பிறைப்பார்த்து வந்த குழுக்களுடன் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகர கிளையின் உறுப்பினர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை கொழும்பு பெரிய பள்ளிவாசல்  பிறைக்குழு நிர்வாகத்தின் உதவி செயலாளர் அஷ்ஷேக் எம். ஆர். அப்துர் ரஹ்மான் ஹிலாலி ஹஸரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...