மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்காகவும் அது போன்று இலங்கை மக்களுக்காகவும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இலங்கையிலிருந்து குழுவினர் கேரளாவுக்கு பயணித்துள்ளனர்.
கேரளாவில் அமைந்துள்ள பிரபலமிக்க விஷ்ணு தேவாலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜைகளில் இவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
அந்தவகையில் இலங்கையிலிருந்து சர்வ மத குழுவின் சார்பில் கலகம தம்ம ரக்ஷி ஹிமி மற்றும் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசநாயக்க ஆகியோர் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.