முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமாகக் கருதப்படுகின்ற பலஸ்தீனத்தில் அமைந்திருக்கின்ற அல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேலினுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றது.
இஸ்ரேல் தன்னுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இப்பள்ளிவாசலின் புனிதத்தன்மையை பாதிக்கின்ற வகையில் பல்வேறு நாசகார செயல்களை செய்து வருகின்றதை ஊடகங்களில் அடிக்கடி காணுகின்ற விடயம்.
இருந்தபோதிலும் பலஸ்தீனத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய புனித பூமியை பாதுகாக்கும் வகையிலும் அந்த பள்ளிவாசலில் தொழுவதால் கிடைக்கும் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் பல்வேறு இராணுவ ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அப்பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கின்றனர்.
அந்தவகையில் ஹஜ் பெருநாள் தொழுகையும் அல்அக்ஸா பள்ளிவாலில் இடம்பெற்ற போது பல்லாயிரக்கணகான பலஸ்தீன முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருப்பதை அல்ஜஸீரா ஊடகம் வெளியிட்டிருந்ததை இந்த காணொளி காட்டுகின்றது.