இஸ்ரேல்-பலஸ்தீன மோதல் விவகாரம்: ஸ்டார்பக்ஸால் மில்லியன் கணக்கான பயனாளர்களை இழந்த பொப் குழு!

Date:

அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்டார்பக்ஸ் எனும் கோஃபி நிறுவனம் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு ஜெர்ரி பால்ட்வின் செவ் சிகிள்,  கார்டன் போவ்கர் ஆகியோர் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் என அனைவரும் கூட்டாகச் சேர்ந்து இந்த நிறுவனத்தை தொடங்கினர்.

இதையடுத்து,  உலகம் முழுவதும் இந்த நிறுவனம் மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

இவ்வாறு இருக்கும் நிலையில்,  தென் கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழு BTS ஜின்,  சுகா,  ஜே-ஹோப்,  RM, ஜிமின்,  V,  ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய கே – பாப் குழுவுடன் ஸ்டார்பக்ஸ் கோஃபி இணைந்து உள்ளது.

இந்நிலையில்,  தற்போது கே – பாப் குழுவுடன் ஸ்டார்பக்ஸ் கோஃபி இணைந்ததால், கே – பாப் குழுவின் சமூக வலைதள பக்கத்தின் பின்தொடர்பாளர்கள் (followers) அதிரடியாக குறைந்துள்ளது.

இஸ்ரேல்-பலஸ்தீன மோதல் தொடர்பாக ஸ்டார்பக்ஸின் கடந்தகால நடவடிக்கைகளில் பின்விளைவாக தான் தென் கொரியாவில் இந்த நிறுவனத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக,  கடந்த 30 நாட்களில் 6,74,370 பின்தொடர்பவர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...