இன்று நள்ளிரவு முதல் முலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் 11 லீட்டர் ஒன்றின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 344 ரூபாவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 41 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 379 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
மேலும் ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
