‛ஒரு முஸ்லிம் கூட இல்லை: இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை: விவாதமான மோடியின் அமைச்சரவை

Date:

நேற்று முன்தினம் பிரதமாக 3வது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்றார்.

மேலும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவை தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஏனென்றால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 ஆட்சியில் இஸ்லாமியர் இல்லாமல் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நம் நாட்டில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் ஒரு கட்சி 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

ஆனால் இந்த தேர்தலில் பாஜக உள்பட எந்த கட்சிக்கும் 272 இடங்கள் கிடைக்கவில்லை.

மாறாக பாஜக 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் 52 எம்பிக்கள் உதவியுடன் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது.

3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார். அதன்பிறகு 72 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இவர்களுக்கு நேற்று அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் இல்லாமல் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் 200 மில்லியன் (அதாவது 2 கோடி) இஸ்லாமியர்கள் வசிக்கும் நிலையில் பிரதமர் மோடியின் 3.0 மத்திய அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது இந்திய வரலாற்றில் முதல் முறையாகும்.’

1999ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு முறை மத்தியில் ஆட்சி அமையும்போது குறைந்தபட்சம் ஒரு இஸ்லாமியருக்காவது மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கடந்த 1999ல் பாஜகவின் வாஜ்பாய் பிரதமரானார். அப்போது 2 இஸ்லாமியர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தனர். ஷாநவாஸ் ஹுசைன் மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

அதன்பிறகு 2004ல் ஆட்சி மாற்றம் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமரானார். அப்போது 4 இஸ்லாமியர்கள் மத்திய அமைச்சர்களாகினர்.

அதன்பிறகு 2009ல் மீண்டும் மன்மோகன் சிங் பிரதமானார். அப்போது 5 இஸ்லாமியர்கள் மத்திய அமைச்சர்களாக செயல்பட்டனர்.

இதையடுத்து 2014ல் ஆட்சி மாற்றம் நடந்தது. 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமானார்.

அப்போது​ராஜ்யசபா எம்பியாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டார்.

அதன்பிறகு 2019ல் பாஜக 2வது முறையாக வென்றது. மோடி மீண்டும் பிரதமரானார். அப்போது பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

ராஜ்யசபா எம்பியாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி 3 ஆண்டு வரை அந்த பொறுப்பில் இருந்தார். 2022ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது.

இதையடுத்து மீண்டும் அவர் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பிரதமர் மோடியின் 2.0 ஆட்சியில் கடைசி 2 ஆண்டுகள் இஸ்லாமிய அமைச்சர் இல்லாமல் கடந்தது.

இத்தகைய சூழலில் தான் தற்போது மீண்டும் மோடி தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய ஆட்சியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.

பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் உள்ள நிலையில் ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும்.

நம் நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் அமைக்கப்பட்ட முதல் மத்திய அமைச்சரவை என்ற பெயரை இந்த புதிய அமைச்சரவை பெற்றுள்ளது.

அதேவேளையில் லோக்சபா தேர்தலில் தோற்றாலும் சீக்கியம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்கள் தொகையில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்கு கூட மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கி உள்ளன.

முன்னதாக இந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக லோக்சபா தேர்தலில் மொத்தம் 24 பேர் முஸ்லிம்களை மக்கள் எம்பிக்களாக தேர்வு செய்தனர்.

இதில் ‛இந்தியா’ கூட்டணியில் 21 பேர் எம்பிக்களாக உள்ளனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றார். அதேபோல் ஜம்மு காஷ்மீரில் இருந்து அப்துல் ரஷித் ஷேக், லடாக்கில் இருந்து முகமது ஹனீபா ஆகியோர் சுயேச்சைகளாக வென்றனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...