கடவுச்சீட்டுகளை பெற புதிய தேசிய அடையாள அட்டை அவசியம்!

Date:

புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏராளமான விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக அறியப்படுகிறது. மேலும் பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட புகைப்படம் வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகிறன என்றார்.

பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக என்றும் அவர் கூறினார்.

எனவே புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...