கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இஸ்ரேல்: ஐ.நாவின் வெட்கக்கேடான தீர்மானம் என நெதன்யாகு விசனம்

Date:

குழந்தைகளுக்கு எதிரான சட்டங்களை மீறும் படைகளின் பட்டியலில் இஸ்ரேல் ராணுவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு குழந்தைகளை பாதுகாக்க தவறிய குற்றவாளிகள் பட்டியலில் இஸ்ரேல் ராணுவமும் இடம் பெற்றுள்ளதாக  ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டன் அறிவித்துள்ளார்.

இந்த பட்டியல் அடுத்த வாரம் ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும். மோதல்களில் குழந்தைகள் கொல்லப்படுவது, உதவி கிடைக்காதது, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை “ஹமாஸின் அபத்தமான கூற்றுக்களை ஏற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தன்னை வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்த வெட்கக்கேடான தீர்மானத்தால் தான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளேன்” என் இஸ்ரேலுக்கான ஐக்கிய நாடுகள் சபையிக் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 221 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அண்மைய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...