கொரோனாவால் மரணித்தவர்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் முஸ்லிம்களை இலக்குவைத்து எடுக்கப்பட்ட இனவாத தீர்மானம்: சஜித்

Date:

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், அப்போது இருந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களை இலக்காகக்கொண்டு இனவாத அடிப்படையில்  செயற்பட்டு சடலங்களை எரிப்பதற்கு தீர்மானித்திருந்தது என எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையில், கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் போன்று எதிர்காலத்தில் அவ்வாறான பிழையான தீர்மானங்களை தவிர்க்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே சஜித்  இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கொவிட் தொற்றில் மரணிக்கும் சடலங்களை எதிர்க்கவேண்டும் என அப்போது இருந்த அரசாங்கம் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து எடுத்த நடவடிக்கை, அரசியல் வரலாற்றில் முஸ்லிம் இனத்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான இனவாத செயற்பாடாகும்.

கொவிட் தொற்றில் மரணிக்கும் சடலங்களை நடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் மிகவும் கீழ்த்தரமான செயல்.

எமது நாட்டின் முஸ்லிம் மக்களின் உரிமையை மீறி இவ்வாறு சடலங்களை எரிக்க எடுத்த தீர்மானம் அடிப்படை உரிமையை மீறும் செயல். இது ஒரு இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்கு எதிராக அ்ப்போது இருந்து அரசாங்கத்தின் மிக மோசமான இந்த தீர்மானத்துக்கு எதிராக ஆரம்பமாக வீதிக்கு இறங்கி போராடியது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாகும்.

அதனால் நாட்டின் ஒரு இனத்துக்கு மாத்திரம் எதிராக திட்டமிட்டு, இனவாதமாக செயற்படும் வகையில், கொவிட் தொற்றில் மரணித்தவர்களை எரிக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொண்டவர்கள் யார் என்பதை தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...