ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று (02) நடைபெறவுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.