இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது தாக்குதல் குறித்து தகவல்கள் வெளியாகின.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு வலுவாக இல்லை என்பதை இத்தாக்குதல் காட்டுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கரிஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தாக்குதல் நடத்திய குழுவினர் பேருந்தைச் சுற்றி வளைத்தனர். அதை நோக்கி அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்,” என்று ஜம்மு காவல்துறை உயர் அதிகாரி மொஹித்தா ஷர்மா தெரிவித்தார்.
பேருந்தில் இருந்தவர்கள் சிவ கோரி குகைக் கோயிலில் இருந்து ரியாஸி மாவட்டத்தில் உள்ள கத்ராவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.