துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது.

Date:

துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (07) நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளது.

அதற்கமைய, இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1445 துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான (பிறை 10) எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (07) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிறைக்குழு ஆகியன இணைந்து இவ்வறிவிப்பை ஏகமனதாக வெளியிட்டுள்ளது.

இதேவேளை  துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி சவூதியில் தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...