வரக்காபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, நீர் நிலையொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 13 பேர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே ராகுல் வித்தியாலயத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.