பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்ய விசேட நிபுணர் இலங்கை வருகை

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்கு உள்ளாகி கடலில் மூழ்கியதால் கரையொதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவை சேர்ந்த விசேட நிபுணர் பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

புத்தளம், வத்தளை பிரதேசங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குறித்த பிளாஸ்டிக் கழிவுகளை அவர் ஆய்வு செய்யவுள்ளார்.

அத்துடன், அவருக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியாவின் சட்டத்தரணி மிச்செல் டெய்லரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் ஊடாக நாட்டின் கரையோர வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆய்வு அறிக்கையை பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன் தயாரிக்கவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இதற்கு முன்னரும் நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...