புனித ஹஜ் காலத்தில் சுமார் 44 பாகை செல்சியஸ் வெப்பத்தை எதிர்பார்ப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஹஜ் கடமையின்போது ஆயிரக்கணக்கான வெப்ப பாதிப்பு சம்பவங்கள் பதிவான நிலையில் இந்த ஆண்டிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
‘இந்த ஆண்டு ஹஜ் காலத்தில் மக்கா மற்றும் மதீனாவில் சராசரி வெப்பத்தை விட ஒன்றரை மற்றும் இரண்டு பாகை அதிக வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் ஐமன் குலாதம் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த யாத்திரையில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்றிருந்ததோடு வெப்பநிலை 48 பாகை செல்சியஸை தொட்ட நிலையில், 2,000க்கும் அதிகமானவர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிட்டது.