முஜீபுர் ரஹ்மானுக்கு பாராளுமன்றத்தில் புதிய கடமை!

Date:

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமையன்று சபாநாயகரின் அறிவிப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகர் தனது அறிவிப்பின்போது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு மற்றும் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகவும் முஜீபுர் ரஹ்மான் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் இதன்போது அறிவித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...