மேற்கு கரையில் காயமடைந்த பலஸ்தீனரை ஜீப்பில் கட்டி அழைத்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்

Date:

மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

மேற்கு கரை ஜெனின் நகரத்தில் கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலிய இராணுவம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலஸ்தீனர் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு முதலுதவி செய்யாமல் இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பின் முன்பக்கம் கட்டி இழுத்து சென்றது.

இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து இஸ்ரேல் இராணுவத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்தன.

இந்த நிலையில், தேடப்படும் சந்தேக நபர்களை பிடிக்க ஜெனினில் நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் அந்த பலஸ்தீனர் காயமடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால், போர் நடவடிக்கையின்போது நிலையான விதிமுறைகளை கடைபிடிக்க தவறிவிட்டது. காயமடைந்த பலஸ்தீனரை ஜீப்பின் மேல் கட்டிவைத்து இழுத்துச் சென்ற சம்பவம் இஸ்ரேலிய ராணுவத்தின் விதிமீறலை எடுத்துக்காட்டுகிறது என பல முன்னணி சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டின.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,காயமடைந்த அந்த பலஸ்தீனியரை மருத்துவர்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து காயமடைந்த பாலஸ்தீன நபரின் குடும்பத்தினர் கூறுகையில்,

இஸ்ரேலிய இராணுவத்தின் கைது நடவடிக்கையின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டபோதும், ஜீப்பின் முன்புறத்தில் கட்டிக்கொண்டு அவரை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் இராணுவம் இழுத்துச் சென்றது என்று தெரிவித்தனர்.

மேற்கு கரை நகரமான ஜெனின் வரலாற்று ரீதியாக போராளிக் குழுக்களின் கோட்டையாக திகழ்கிறது. இதனால், இஸ்ரேல் ராணுவம் இங்கு அவ்வப்போது தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது.

Popular

More like this
Related

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...