அகில இலங்கை வை.எம். எம்.ஏ .பேரவையின் 75 ஆவது தேசிய மாநாட்டுக்கான புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாவனல்லை ஹெம்மாத்தகம பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வை.எம்.ஏ.பேரவையின் முதலாவது தேசிய தலைவராவார்.
அகில இலங்கை வை. எம். ஏ.பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு ஜுன் 29ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இஹ்ஸான் ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போதே தேசிய மாநாட்டுக்கான புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு செய்யப்பட்டார்.