அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

Date:

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு சமுகமளிக்க முடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், குருணாகல், பொலன்னறுவை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த  மாவட்டங்களில் வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து தடை காரணமாக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாது பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்த விசேட விடுமுறை உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...