இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு!

Date:

இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்களின் நெறிப்படுத்தலில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிதிகள் குழுவுடனான உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு சந்திப்பு நேற்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இந்தியன் முஸ்லிம் லீக்கின் பிராந்தியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான கே. ஏ. எம். முஹம்மத் அபூபக்கர் (MLA), தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் மணிச்சுடர் மற்றும் மக்கள் குரல் ஜனாப் எம். கே. சாஹுல் ஹமீது,
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் உதவிப் பொதுச் செயலாளர் ஜனாப், எஸ். ஏ. முஹம்மத் மக்கி தமிழ்நாடு திருநெல்வேலி “அலி சன்ஸ் “நிறுவன தலைவர், ஜனாப் எம். நெய்னார் முஹம்மத் கடாபி ஆகியோர் அடங்கிய குழுவை நேற்றைய தினம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினர் கல்முனையில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாகவும்
பேசியிருந்தனர்.

பரஸ்பர புரிதலுடனான இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான கலை கலாச்சாரம் இலக்கியம் பற்றிப் பேசப்பட்டதுடன் மாநாட்டுக் குழுவினரை இந்தியாவிற்கு வருகைத் தருமாறும் அதிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிதிகளின் அழைப்பையேற்று விரைவில் மாநாட்டு குழு இந்தியா செல்லவிருப்பதாக மாநாட்டுக் குழுத் தலைவர் கலாநிதி ஏ. எல் அன்சார் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்
இந்திய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவம் வழங்கப்பட்டது.

அத்தோடு இந்நிகழ்வில் மாநாட்டுத் தலைவர் அன்சார் அவர்களால் சிரேஸ்ட ஊடகவியலாளர் கல்முனை ஜெஸ்மின் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவராகத் தெரிவாவதற்கு அரும்பாடுபட்ட  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர இணைச்செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகிய இருவரையும் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...