இளங்கலை பட்டம் பெற்ற பிரபல கத்தார் இளைஞர் கானிம் அல்-முஃப்தா!

Date:

ஃபிபா உலகக் கோப்பை 2022 இன் தொடக்க விழாவின் போது புனித குர்­ஆனின் வச­னங்­களை ஓதி உலக அளவில் பிரபலமான இளை­ஞ­ர் கானிம் அல்-­முஃப்தா பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றார்.

20 வய­தான கானிம் அல் முஃப்தா ‘Ca­u­d­al Re­g­r­e­s­sion Sy­nd­r­o­me’ எனப்­படும் மரபு ரீதி­யி­லான குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டவர்.

உடலில் குறை­பாடு இருந்­தாலும் அதைப் பொருட்­ப­டுத்­தாமல் தான் விரும்­பிய துறை­களில் முன்­னே­றி­யதால் அவ­ரது வாழ்க்கை மற்­ற­வர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்கும் வகையில் பிர­ப­ல­மாகி இருக்­கி­றது.

இன்ஸ்­டா­கிராம், யூட்யூப் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களில் அவரை பல இலட்சம் பேர் பின்­தொ­டர்­கி­றார்கள்.

இளம் தொழில்­மு­னை­வோ­ரான அவர், ‘காரிஸா’ என்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறு­வனம் ஒன்றை நடத்­து­கிறார். இன்று ஆறு கிளைகள் மற்றும் 60 பணி­யா­ளர்­க­ளுடன், இந்­நி­று­வனம் வெளி­நா­டு­க­ளிலும் வளை­குடா முழு­வதும் விரி­வ­டைந்­துள்­ளது.

தேசிய அள­விலும், சர்­வ­தேச அள­விலும் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு அவர் நல்­லெண்ணத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

மற்­ற­வர்­க­ளுக்கு தன்­னம்­பிக்­கை­ய­ளிக்கும் உரை­களை நிகழ்த்­து­கிறார். ஸ்கூபா டைவிங், கால்­பந்து, ஹைகிங் மற்றும் ஸ்கேட்­போர்டிங் உள்­ளிட்ட பல்­வேறு தீவிர விளை­யாட்டு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கிறார்.

எதிர்­கா­லத்தில் இரா­ஜ­தந்­தி­ரி­யாக வர வேண்டும் என்ற இலட்­சி­யத்­துடன் அர­சியல் விஞ்­ஞா­னத்தில் தனது கல்­லூரிப் பட்­டப்­ப­டிப்பைத் முடித்துள்ளார்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...