இஸ்ரேல் நோக்கிச் செல்லும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தக்கூடாது: பிரிட்டன் எம்.பிக்கள் கோரிக்கை

Date:

இஸ்ரேலுக்கு 300,000 பீப்பாய்கள் ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டரில் நிறுத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியுறவுச் செயலர் டேவிட் லாமிக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நேரப்படி இன்று புதன்கிழமை கப்பல், ஜிப்ரால்டரை வந்தடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஜிப்ரால்டர் அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் அதிகாரப்பூர்வ கோரிக்கையைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜெட் எரிபொருள் இறக்கப்பட்டு, காசா மக்கள் மீது குண்டுகளை வீசும் இஸ்ரேலிய விமானப்படையின் F16 மற்றும் F35 எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுவரை 39, 000 பேரைக் கொன்ற காஸா மீதான போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பிரிட்டன் மீளாய்வு செய்து வருகிறது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...