உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்!

Date:

2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 8 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு 7 மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...