கண்டி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசேட பாதுகாப்பு!

Date:

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கண்டி நீதிமன்றத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்  நீதிமன்றத்துக்கு வருகை தந்த பொதுமக்களும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கண்டி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...