சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தலைவர்கள்

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் பல தசாப்தகாலமாக எனக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்கின்றேன்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதிக்கான போராட்டத்துக்காக அவர் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்திருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இரா.சம்பந்தனின் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தனது இரங்கலினை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...