தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் இறுதி கிரியைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.