ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

Date:

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரித்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு மற்றும் அதன் இடைக்கால மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இதன் மீதான தீர்ப்பு இன்று சற்றுமுன்னர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் இதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...