டிஜிட்டல் யுகம் பிரவேசத்துக்கான ‘Mojo Journalism’ இலவச செயலமர்வு

Date:

அரச அங்கீகாரம் பெற்ற ‘பஹன மீடியா நிறுவனத்தின்’ பஹன அகடமி வழங்கும் இலவச மோஜா ஜெர்னலிஸம் (Mojo Journalism) செயலமர்வு இவ்வாரம் ஜுலை 10,  11 ஆம் திகதிகளில் பள்ளிமுல்லை, பாணந்துறை அஸ்வர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திஹாரிய சுமையா அரபுக்கல்லூரி அனுசரணையில் சாதாணர தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இந்த இருநாள் செயலமர்வில் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர் இஸ்பஹான், மீள்பார்வையின் முன்னாள் ஆசிரியரும் ‘நியூஸ்நவ்’ செய்தித்தளத்தின் பிரதம ஆசிரியருமான பியாஸ் முஹம்மத், தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் பஹன அகடமியின் பாடத்திட்டப் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக வருகைத்தர இருப்பதுடன் இரண்டாம் நாள் சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு பிரதம அதிதியாக அஷஷெய்க் முஜீப் சாலிஹ் மற்றும் அதிதிகளாக அஹதிய்யா புகழ் ஏ.எல்.எம். அஸ்வர் உள்ளிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பாணந்துறை பகுதியில் இம்முறை சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய 50பேருக்கு மட்டுமே சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளதுடன் இச்செயலமர்வில் கலந்துகொள்வோர் ஸ்மார்ட் கைப்பேசியுடன் வரவேண்டும் என பஹன அகடமி கேட்டுக்கொள்கிறது.

மேலதிக விபரங்களுக்கு 0772614897 (அஸ்வர்) அல்லது 0770347779 (ஹில்மி) தொடர்புகொள்ளலாம்

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...