மறைந்த ஆர். சம்பந்தனின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்துக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00மணிமுதல் மாலை 04.00மணிவரை பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
அன்னாரது பூதவுடல் பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் மக்கள் அஞ்சலிக்காக நாளை(02) வைக்கப்படவுள்ளது.