புதுப்பொழிவுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘Amazon College & Campus’ சந்தைப்படுத்தல் காட்சியறை!

Date:

சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக் கொண்ட கல்வி நிறுவனமாக இயங்கி வரும் Amazon College & Campus பம்பலப்பிட்டி தலைமைக் காரியாலயத்தில் புதிய மாடியில் சந்தைப்படுத்தல் பிரிவினை புதுப்பொழிவுடன் ஆரம்பித்துள்ளது.

இந் நிகழ்வு கடந்த 27ம் திகதி காலை 9.30 மணிக்கு அதன் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில், உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவின் பேராசிரியர் கேரி கெல்ஸ்டோன் மற்றும் விசேட அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஜே.சேதுரத்னம் அவர்களும் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி  அபேரத்ன அவர்களும், இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தின் தலைவர் அந்தோ தினேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த புதிய சேவையின் மூலமாக இலங்கை வாழ் மாணவர்களுக்கும் பல பாடநெறிகள் இலகுவாக கற்கக் கூடிய சேவையும் மேலும் நவீன கற்றல் முறைகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Diploma முதல் HND, Degree, Master, PhD, பாடநெறிகளான Psychology, Teacher Training, Business Management, Caregiver, Childcare Center Operator, English, IELTS, IT ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு கற்பதற்குபல புலமைப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக நிறைவேற்று பணிப்பாளர் திரு.  இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.

மேலும் Amazon College ஆனது கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் TVEC (மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு) இல் பதியப்பட்ட நிறுவனமாகும்.

மேலதிக விபரங்களுக்கு:
0765 204 605
www.amazoncollege.lk

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...