மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை பரிதாப மரணம்!

Date:

பொத்துவில் -அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தானது நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 23 வயதான இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இஸ்ரேலிய பிரஜை படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...