அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்னிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இன்றைய தினம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தராத நிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களை நுவரெலியா பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல்களை பரிசீலனை செய்த நீதிபதி ஜயமினி அம்பகஹவத்த வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நபர்களை கைதுசெய்து ஒகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...