இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு, வெளிவிவகார, மின்சக்தி மற்றும் எரிசக்தி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உபகுழுவின் அமைச்சரவையின் கட்டளைகளுக்கு இணங்க பொருத்தமான யாப்பு உருவாக்கப்படும்.

புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்க மேற்படி குழு ஏற்பாடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...