இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்:உடன் நாடு திரும்பிய நெதன்யாகு

Date:

இஸ்ரேல் மீது பாரிய ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந் தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்புகிறார் என அவருடைய அலுவலம் தெரிவித்து உள்ளது.

தெற்கு லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ரொக்கெட் தாக்குதல் பற்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் கூறும்போது, லெபனானில் கிராமம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் அதற்கு பதிலடியாக, கோலன் ஹைட்சில் உள்ள இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்தது.

எனினும், இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி கூறும்போது, ஹிஸ்புல்லா அமைப்பு பொய் கூறுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளுக்கு எதிராக போர் தொடுக்கும்படி இஸ்ரேல் தலைவர்களிடம் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நெருக்கடி எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது நடந்த இந்த கொடிய தாக்குதலால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...