கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலைக்கான புதிய கட்டிட அடிக்கல் நடும் விழா 2024 ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
மத்திய மாகாண ஆளுநரின் தலையீட்டில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 03 கோடியே 60 இலட்சம் ரூபா மதிப்பீட்டிலான கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வே இவ்வாறு இடம்பெறவுள்ளது.
பாடசாலையின் அதிபர் திருமதி சி.எம்.எப். சிமாரா (SLPS) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக மத்திய மாகாணத்தின் பிரதம செயலாளர் திரு. ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிறி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், விசேட அதிதிகளாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. எச்.எம்.எம்.யூ.பி(B) ஹேரத், திட்ட உதவிச் செயலாளர் திரு. கே.ஜி. நிசாந்த, மாகாணப் பணிப்பாளர் திரு. எம்.பி. அமரசிங்க பியதாஸ, வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி. டி.சி.ஐ. அந்தரகே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை சொந்தங்கள் அனைவரையும் ஏற்பாடு குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.